'ம்'
என்னும் மெய்யில் (நிலையாக) இருந்து பற்றாக (வற்றாத)
நிலையாக எங்கும் பூரணமாக இருப்பது
கடவுள், அதுவே இயக்க நிலைக்கு
மாறும் போது பரம அணுவாக
மாறி பரம அணுவின் இயக்கத்தினால்
ஒன்றுக்கொன்று மோதி (அலை) பல
அணுவாகச் சிதறி மீண்டும் மெய்யிலே
கலப்பதால் மெய்யே காந்தம் மாக
மாற்றம் அடைந்து அதிலிருந்து வரும்
காந்த அலை காலத்தால் இடத்திற்கு
தகுந்தவாறு அழுத்தம் (வடிவம்), ஒலி, ஒளி, சுவை,
மணம், மனம் ஆகப் பரிணாமம்
அடைந்து ஒத்தவற்றை ஈர்த்தும் மற்றவை விலகியும் தன்
சுழற்சியின் காரணமாக பேராற்றல் கொண்ட
மெய்யிலே மிதக்கிறது.
அ+உ+ம்=ஓம்
'ம்'
என்பது நிலையாக இருப்பது அதுவே
சிவன் வடிவம்.
'அ'
என்பது இயக்க நிலை அதுவே
சக்தியின் வடிவம்.
'உ'
என்பது இயக்கத்தால் ஏற்பட்ட அலை.
இவை
மூன்றும் சேர்வதால் காந்தம் அதிலிருந்து வருவது
காந்த அலை ஓம் என்ற
பிரணவம் இதன் மூலம் ஒவ்வொன்றாகத்
தோன்றுவது பஞ்சபூதம் இந்தத் தத்துவத்தை விளக்குவதே 'ஒ' வடிவத்தை ஒத்த
யானை தலை கொண்ட விநாயகர்.
முதல்
உயிர் புல்லாகவும் அதில் இருந்து செடி,
கொடி, மரம் இவை அனைத்தும்
ஓர் அறிவு என்றும் காலத்தால்
தன் மாற்றம் அடைந்து புழு
(வாய்) இரண்டு அறிவாகவும் அதனைத்
தொடர்ந்து மூக்கு, கண், காது
காலத்தால் தன் நிலை மாற்றம்
அடைந்து மனிதன் என்ற நிலை
அடைந்து மனமாகவும் இருப்பது காந்த அலைதான் என்று
ஆறுமுகம் கொண்ட கந்தன்வடிவம்.
1. சைவ
சமயம் – சிவன்
2. சாத்தச்
சமயம் – சக்தி
3. வைணவ
சமயம் – திருமால் – சங்கு, சக்கரம்
4. செளவ்ர
சமயம் – சூரியன்
5. காணாதிபத்தியம்
சமயம் – விநாயகர்
6. கெளவ்மார
சமயம் – கந்தன்
ஒன்றே
காலத்தால் தன்நிலை மாற்றம் அடைந்து
பல வாக இருப்பது ஒன்றே.
மிக அருமை
ReplyDeleteவாழ்த்துகள்.
Delete