Sri Horizon Product: பகவத் கீதை காட்டும் பாதை

Monday, March 5, 2018

பகவத் கீதை காட்டும் பாதை


பகவான் மனிதக் குலத்தின் மேன்மைக்காவும், தனக்கு விதிக்கப்பட்ட கடமையை செய்யும் போது அதனால் ஏற்படும் விளைவைக் கண்டு அஞ்சி மனம் சோர்ந்து இருக்கும் போது அறியாமையை நீக்கி மனித குலத்திற்கு உபதேசித்தது பகவத் கீதை ஆகும். இது தர்ம சாஸ்திர நூலாகப் போற்றப்படுவதால் மதத்தைக் கடந்து எல்லோருக்கும் பொதுவான நூலாகும். வேதம், உபநிசம் என்பது கரும்பை உரித்து அதன் சுவையை உணர்வதைப் போல்  கடினம் ஆனால் பகவத் கீதை கரும்பை பிழிந்து பருகுவதைப் போல் பகவான் மனித குலத்திற்கு எளிமையாகக் கொடுத்து இருப்பது பகவத் கீதை ஆகும்.

முற்காலத்தில் தகுதிவாய்ந்த குருவின் மூலம் வாய்வலியாக சொல்லி செவிவழியாக கேட்டு பயன் பெற்ற மனிதக் குலம் பிற்காலத்தில் ஏட்டில் எழுதப்பட்டு அதன் கருத்தை முழுமையாக உணராமல் ஒரு சிலர் பகவத் கீதையை கொலை செய்ய தூண்டுகிறது, மனிதக் குலத்தின் குல தொழில் மூலம் இன பிரிவினையை ஏற்படுத்துகிறது இது போன்று பகவத் கீதையை சொல்லி ஒரு விவாதிக்கும் தன்மையை ஏற்படுத்தினர். இதில் சொல்லப்பட்டது மனித பிறப்பின் இரகசியம், மனித பிறப்பின் தன் நிலையில் இருந்து எப்படி தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய வழிமுறைகள், பகவானைப் பற்றிய புரிதல் இது போன்ற அதிநுன்பத்தை உணர்த்துவதே பகவத் கீதையை ஆகும்.

பகவத் கீதையில் மனித பிறபின் இரகசியமாகப் போற்றப்படுவது பகவானைக் காண்பதும், மனித பிறப்பில் இருந்து இனி பிறவா நிலையை அடைவதைப் பற்றி பதினெட்டு அத்தியாயத்தில்  விவரிக்கிறது.

மனித பிறப்பு மூன்று (சத்துவ,ராஜ,தமோச) வகையான குண நலங்களுடன் தங்களின் கர்ம பலன்களை பொருத்து மூன்று குணங்களின் தன்மையும் கலந்தோ அல்லது தனித்தோ மனித பிறப்பு நிகழ்கிறது இதில் மனம் ஆனது ஒரு செயலை செய்யத் தூண்டுகிறது அந்தச் செயல் தனக்கோ, பிறர்க்கோ நன்மையாக இருப்பின் அது புண்ணியத்திலும் அதுவே தீமையாக இருப்பின் பாவத்திலும் முடிகிறது.

ஒவ்வொருவரின் புண்ணிய, பாவத்தின் தன்மையை பொருத்து குணங்களில் பதிந்து இருப்பதால் செய்யும் செயல் ஒவ்வொருவருக்கும் மாறுவதால் புண்ணியத்தை அதிகரிக்கப் பகவான் நான்கு வகையான பாதையை காட்டுகிறார் அதில் பக்தி யோகம், ஞான யோகம், கர்ம யோகம் மற்றும் கிரியா யோகம் ஆகும்.

இதில் கர்மா என்பது ஒரு செயலை செய்வதைக் குறிக்கிறது அதாவது பக்தியின் மூலம் பகவானை நினைத்து செய்வது பக்தி யோகம், அறிவின் மூலம் எண்ணுதல் ஞான யோகம், தொழில் மூலம் செய்வது கர்ம யோகம், யோகா என்பது (இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், தாரணை, பிரத்தியாகாரம், தியானம், சமாதி) 8 படி நிலைகளைக் கொண்டது அதுவே கிரியா யோகம்.
    
கடமையைச் செய், பலனை எதிர்பாராதே இதன் மூலம் கடமையை செய்வதன் மூலம் வரும் நன்மை, தீமையைக் கண்டு அஞ்சாமல் கடமையை செய் என்கிறார் பகவான்.

கடமையை தன் இன்பத்திற்கா மட்டும் செய்யாமல், பிறருக்கும் பயன் தரும் வகையில் இருந்தால் அந்தக் கடமை யோகமாக மாறும்.  யோகம் என்றால் ஒருங்கிணைதல்.

பக்தியின் மூலம் பகவானை உணர்கிறோம், ஞானத்தின் மூலம் பகவானை அறிகிறோம், கர்மத்தின்(தொழில்) மூலம் பகவானை அடைகிறோம், கிரியாவின் மூலம் பகவானிடம் கலக்கிறோம்.

பகவான் எங்கும் இருக்கிறார், எதிலும் இருக்கிறார் நம் உள்ளத்திலும் இருக்கிறார் அதனை உணர்ந்து அறிவது தான் ஞானம். இந்த ஊன் உடலை ஒளி உடலாக மாற்றி, ஒளி உடலை ஒலி உடலாக மாற்றி, ஒலி உடலை ஞான உடலாக மாற்றுவதே பகவத் கீதையின் சாரம்.

இதை உணர்ந்து பகவத் கீதையை ஒவ்வொருவரும் படித்து அதன் படி நடந்து நம்மைத் தகுதி ஆக்கிக் கொண்டால் பகவான் நமக்கான குருவை அடையாளம் காட்டுவார். அக் குருவை பின்பற்றி நாமும் அதற்கான முயற்சி செய்தால் ஞானத்தை அடைந்து பிறவிப் பிணியை நீக்கி, இனி பிறவா பேர் இன்பத்தை அடையலாம்.

No comments:

Post a Comment

write your valuable thoughts here...