வெளிப்புற சுற்றுச்சூழலை மாசுபடுத்திய நாம் தற்போது
அறியாமையால் அகஉடலையும் மாசுபடுத்தி அதனால் மனிதன் வாழ்நாள் முழுவதும் ஆங்கில மருந்தை
உண்டு தன் நோயும் குறையாமல், தானும் கெட்டுத், தன் சந்ததியும் கெடுத்து, மரணத்திற்குப்
பின்பு உடலில் இருக்கும் நச்சால் இந்த இயற்கையை மாசுபடுத்துவதை ஒரு நிமிடம் யோசித்தால்!
உணவை மருந்தாக உட்கொண்ட காலம் மாறி தற்போது மருந்தை
உணவாக உட்கொள்ளும் காலத்தை நோக்கி ராக்கெட் வேகத்தில் பயணித்து கொண்டு இருக்கிறோம்.
இந்த நேரத்தில் சற்று அதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் நாம் அன்றாடம் உட்கொள்ளும்
உணவின் மூலமும், சளி, தலைவலி, காய்ச்சல், வாந்தி இவற்றை எல்லாம் கட்டுப்படுத்த மருந்து, மாத்திரை சாப்பிடுவதாலும் தற்போது நோய்களுக்குப் புதுப்புதுப் பெயர்களை வைத்து
தினமும் மாத்திரையில் தொடங்கி தற்போது தினமும் மாத்திரைகள் சாப்பிட வேண்டிய நிலையில்
முன்னேற்றம் அடைந்து வருகிறோம்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் முக்கியமாக இருப்பது
நீர், பால், சமையல் எண்ணெய், தூள் உப்பு, சர்க்கரை.
நீரில் பிராண சக்தி இருப்பதால் சூடுபடுத்துதல், வடிகட்டுதல், பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர் இவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். (விரிவான தகவலுக்கு)
தற்போது மரபணு மாற்றப்பட்ட மாடுகள் இருப்பதால்
அதில் A1 மூலக்கூறு நோய் உண்டாக்கக் கூடிய புரதம் இருப்பதால் முற்றிலும் தவிர்த்து நாட்டு
மாட்டுப் பாலில் A2 மூலக்கூறு உள்ள நல்ல புரதம் இருக்கிறது.(விரிவான தகவலுக்கு)
சமையல் எண்ணெய்யில் தற்போது விற்கப்படும் 6 ப்ராண்டுகள் கலப்படம் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதில் சன்ஃபிளவர்
ஆயில் என்று சொல்லி அதில் 50% பருத்தி விதை எண்ணையும் 50% பாமாயில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனால் செக்கில் ஆட்டிய எண்ணெய்யைப் பயன்படுத்துவது நலம். (செக்கில் ஆட்டிய எண்ணெய்)(விரிவான தகவலுக்கு புதிய
தலைமுறை வார இதழில் மலர்-7, இதழ்-3, தேதி - 08 அக்டோபர் 2015)
தூள் உப்பிற்குப் பதில் கல் உப்பு அல்லது இந்து
உப்பு பயன்படுத்துவது நலம். சர்க்கரையில் சல்ப்பர் இருப்பதால் அது விசம். அதற்குப்
பதில் நாட்டுச் சர்க்கரை அல்லது பனைவெல்லம் பயன்படுத்தலாம்.
நாம் உட்கொள்ளும் உணவின் மூலம் 33% புற்றுநோய் வருவதாகச் சென்னை அடையாறு புற்றுநோய் கலகத்தின் இயக்குநர் மருத்துவர்
சாந்தா அவர்கள் தனது ஆய்வு அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
மேலும் நாம் உணவு உட்கொள்ளும் முறை, உணவில் அறுசுவையின் பயன்பாடு, உடல் உறுப்புகளின் பயன்பாடு பற்றிய தொகுப்பு கனொலி
மூலமாகவும், மின்னிதழ் மூலமும் காண்க. (புத்தகம்),(கனொலி)
வளிமண்டலத்திலிருந்து கிடைக்கும் பிரபஞ்ச ஆற்றலைப்
பிராண சக்தியாகவும், பிராண வாயுவாகவும் மாற்றித் தருவது தாவரத்திற்கு 1:1 என்ற விகிதத்திலும் பசுமாடு பிராண சக்தியை 1:100 ஆகவும் மாற்றித் தருகிறது.(விரிவான தகவலுக்கு)
அவசர உதவிக்கும் அதுவும் தற்காலிகமாக ஆங்கில மருந்தை
உட்கொள்வதும், நிரந்தர தீர்வுக்கு நமது இயற்கை மருந்தைப் பயன்படுத்தி நாமும், நம் சந்ததியையும் மற்றும் இயற்கையையும் காப்பாற்ற துணைபுரிவோம். (இயற்கை மருந்து)
“நாம் உண்ணும் உணவில்
கட்டுப்பாடு தேவை இல்லை நாம் உண்ணும் முறையில் தான் கட்டுப்பாடு தேவை”
-நன்றி-
_________________________________________________________________________
இப்படைப்பு, “வலைப்பதிவர் மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் மின்தமிழ் இலக்கிய திருவிழா-2015 காவே எழுதப்பட்டது”.
இப்படைப்பு, “வலைப்பதிவர் மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் மின்தமிழ் இலக்கிய திருவிழா-2015 காவே எழுதப்பட்டது”.
இது என் சொந்தப் படைப்பு
என்றும் இதற்கு முன் வெளியிடப்படவில்லை என்றும் உறுதி கூறுகின்றேன்.
அருமை
ReplyDeleteநன்றி